மேலும் செய்திகள்
சுகாதார நிலையம் கட்ட பூமி பூஜை
17-Jul-2025
திருச்செங்கோடு, திருச்செங்கோடு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, எம்.எல்.ஏ., ஈஸ்வரன் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். மொளசி ஊராட்சி, முனியப்பம்பாளையத்தில் புதிய சமுதாயக்கூடம்,கொல்லபாளையத்தில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு நீர்தேக்க தொட்டி, திருச்செங்கோடு நகராட்சி மலை சுற்றுபாதையில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி, சாலப்பாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடை, நாட்டாம்பாளையத்தில் நீர் தேக்க தொட்டி, கருமாபுரத்தில் புதிய அங்கன்வாடி மையம் ஆகியவற்றை எம்.எல்.ஏ., ஈஸ்வரன் துவக்கி வைத்தார்.திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினிசுரேஷ்பாபு, திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் மற்றும் தி.மு.க.,-கொ.ம.தே.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
17-Jul-2025