உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கணவனை தாக்கிய மனைவி கைது

கணவனை தாக்கிய மனைவி கைது

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அடுத்த பெருமாகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் மாரிமுத்து, 55; இவரது மனைவி லதா, 48; மாரிமுத்து குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இந்த குழந்தைக்கு தன் சொத்தை எழுதி வைப்பதாக மாரிமுத்து கூறி வந்துள்ளார். இதனால், லதாவுக்கும், மாரிமுத்துவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த, 5ல் ஏற்பட்ட தகராறில் லதா மற்றும் லதாவின் அக்கா மகனான சதாசிவம் மகன் திவாகர், 29, உள்ளிட்ட, 3 பேர் மாரிமுத்துவை தாக்கியுள்ளனர். இதனால், படுகாயமடைந்த மாரிமுத்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவான, 3 பேரையும் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று லதா மற்றும் சுதாகரை நாமகிரிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை