உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மனவளக்கலை மன்றத்தில் மனைவி நல வேட்பு விழா

மனவளக்கலை மன்றத்தில் மனைவி நல வேட்பு விழா

நாமக்கல்:நாமக்கல் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில், மனைவி நல வேட்பு விழா, நேற்று அறிவுத்திருக்கோவில் அரங்கில் நடந்தது.மனைவியின் பெருமையை போற்றும் விதமாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. நிர்வாக அறங்காவலர் உதயகுமார் தலைமை வகித்தார். செயலாளர் சுப்பிரமணியன், துணைத்தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர், தம்பதியரை வரவேற்றனர். பேராசிரியர் உழவன் தங்கவேலு, விழாவை தொடங்கி வைத்தார்.ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கருணாநிதி-சரஸ்வதி தம்பதி, கால்நடை மருத்துவக்கல்லுாரி முதல்வர் செல்வராஜ்-உமாமகேஸ்வரி தம்பதி, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு-நந்திதா தம்பதி ஆகியோர் பங்கேற்றனர்.மனைவியுடன் இணக்கமாக இருப்பதால் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், முன்னேற்றங்கள் குறித்து விழாவில் பங்கேற்றோர் பேசினர். ஏற்பாடுகளை மனவளக்கலை மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை