உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தபால் நிலைய ஏ.டி.எம்., பயன்பாட்டுக்கு வருமா?

தபால் நிலைய ஏ.டி.எம்., பயன்பாட்டுக்கு வருமா?

ப.வேலுார் : ப.வேலுார், நான்கு ரோடுக்கு செல்லும் சாலையில் தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்கு வங்கி கணக்கு துவங்கியவர்களுக்கு, பணம் எடுக்க வசதியாக, ஏ.டி.எம்., அமைக்கப்பட்டது. இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில், கடந்த எட்டு மாதத்துக்கு முன், ஏ.டி.எம்., மிஷின் இடி தாக்கி பழுதானது. ஆனால், தற்போது வரை, ஏ.டி.எம்., மிஷின் பழுதை சரி செய்யவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். ஏ.டி.எம்., மிஷின் மீண்டும் பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், நேற்று மா.கம்யூனி., கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணி தலைமையில், பொதுமக்கள் தபால் நிலையம் முன், வரும் வாடிக்கையாளர்களிடம் இது குறித்து மனு அளிக்க கையெழுத்து வாங்கினர். 200க்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்து வாங்கி, ஏ.டி.எம்., பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென ப.வேலுார் தபால் நிலைய அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை