உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பால்குட ஊர்வலம் பெண்கள் பங்கேற்பு

பால்குட ஊர்வலம் பெண்கள் பங்கேற்பு

சேந்தமங்கலம், ஆடி கிருத்திகை, கோகுலாஷ்டமியையொட்டி, சேந்தமங்கலம் பாலதண்டாயுதபாணி கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது. கடந்த, 14ல் லட்சார்ச்சனை பூஜையுடன் விழா துவங்கியது. மாலை மயில் வாகனத்தில் உற்சவர் வீதி உலா வந்தார். 15 காலை, 9:00 மணிக்கு, 108 சங்காபிஷேகம், யாக வேள்வி நடந்தது. மாலை, கயிலை வாத்தியங்கள் முழங்க யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. ஆடி கிருத்திகையான, நேற்று காலை விநாயகர் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க பால்குட ஊர்வலம் நடந்தது. பால், தேன் உட்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பூஜை முடிந்ததும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ