உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாப பலி

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாப பலி

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பிலிப்பாகுட்டை பகுதியை சேர்ந்-தவர் ஜெயசந்திரன். இவரது தோட்டத்தில், சேலம் மாவட்டம், தாசநாய்க்கன்பட்டியை சேர்ந்த சரவணன், 30, கடந்த, 3 ஆண்-டுகளாக வேலை செய்து வந்தார். பிலிப்பாகுட்டையை சேர்ந்த சித்ரா, 28, என்பவரை திருமணம் செய்து கொண்டதால், சர-வணன் அப்பகுதியிலேயே வசித்து வந்தார்.இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்-தினம், தோட்டத்தில் மருந்து அடிப்பதற்காக தண்ணீர் எடுக்க சென்ற சரவணன், தவறி கிணற்றில் விழுந்துவிட்டார். இதைய-றிந்த ஜெயசந்திரன், ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரம் போராடி சரவணனை சடலமாக மீட்டனர். இதுகு-றித்து ஆயில்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி