உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு பஸ் துாக்கி வீசியதில் லாரி ஏறி தொழிலாளி பலி

அரசு பஸ் துாக்கி வீசியதில் லாரி ஏறி தொழிலாளி பலி

குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, ஆலாங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம், 48; விசைத்தறி தொழில் செய்து வருகிறார். நேற்று மதியம், 11:40 மணிக்கு, பல்லக்காபாளையம், செங்கமா முனியப்பன் கோவிலில் சுவாமி கும்பிட்டுவிட்டு, 'பல்சர்' டூவீலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, பல்லக்காபாளையம் அருகே, சேலம்-கோவை புறவழிச்சாலையில், சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த அரசு சொகுசு பஸ், டூவீலர் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட சுந்தரம் மீது லாரி ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை