உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தொடர் மழையால் மஞ்சள் ஏலம் ரத்து

தொடர் மழையால் மஞ்சள் ஏலம் ரத்து

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில், 15க்கும் மேற்பட்ட தனியார் மஞ்சள் மண்டிகள் உள்ளன. மேலும், விவசாயிகளின் வசதிக்காக, ஆர்.சி.எம்.எஸ்., என்ற பெயரில் ராசிபுரம் கூட்டுறவு சங்கம் சார்பில் மஞ்சள் மண்டியும் உள்ளது. கமிஷன் குறைவு, உடனடி பணப்பட்டுவாடா ஆகிய காரணங்களால், ஆர்.சி.எம்.எஸ்.,ல் விவசாயிகள் தங்களது மஞ்சளை அதிகளவு விற்பனை செய்து வருகின்றனர்.நாமகிரிப்பேட்டை சுற்று வட்டார பகுதியில் கடந்த வாரம் முழுதும் மதியத்திற்கு மேல் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால், மஞ்சளை வேக வைத்து, காய வைக்கும் பணி பாதிக்கப்பட்டது. இதனால், திட்டமிட்டப்படி இந்த வாரம் மஞ்சளை விவசாயிகளால் கொண்டுவர முடியவில்லை. மஞ்சள் வரத்து குறைந்ததால், ஆர்.சி.எம்.எஸ்.,ல் நடக்க இருந்த மஞ்சள் ஏலம், நேற்று ரத்து செய்யப்பட்டது. அடுத்த வாரம் வழக்கம் போல் மஞ்சள் ஏலம் நடக்கும் என, ஆர்.சி.எம்.எஸ்., நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை