சாலை விபத்தில் இளைஞர் பலி
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, மரப்பரை கிராமம், பாறைக்காடு பகு-தியை சேர்ந்தவர் குமாரசாமி மகன் தமிழ்குமரன், 36. ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணிபு-ரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல பணியை முடித்துவிட்டு அவரது டூவீலரில் வீட்டிற்கு திரும்பி கொண்டி-ருந்தார்.எலச்சிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, வையப்பம-லையில் இருந்து கேரளாவிற்கு கறிக்கோழி ஏற்றிச்சென்ற, 'ஈச்சர்' வேன் டூவீலர் மீது நேருக்குநேர் மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே தமிழ்குமரன் பலியானார். இவருக்கு, சுகன்யா, 30, என்ற மனைவியும், 10 வயதில் ஒரு மகனும் உள்-ளனர். எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.