உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நிலக்கடலையில் துத்தநாக குறைபாடு; ஜிப்சம் இட வேளாண்துறை அறிவுரை

நிலக்கடலையில் துத்தநாக குறைபாடு; ஜிப்சம் இட வேளாண்துறை அறிவுரை

நாமகிரிப்பேட்டை : நிலக்கடலையில் துத்தநாக குறைபாட்டை தீர்க்க, 'ஜிப்சம்' இட வேண்டும் என, நாமகிரிப்பேட்டை வேளாண்துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து, வெளியிட்ட அறிக்கை: நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் நிலக்கடலையில் ஊட்டச்சத்து குறைபாடு பரவலாக ஏற்பட்டுள்ளது. இலை நரம்பிற்கு இணையாக லேசான மஞ்சள் நிற கோடுகள் இலையின் பரப்பில் தோன்றும். முதிர்ந்த நிலையில் பச்சை பற்றாக்குறை மற்றும் வளர்வது தடைபடும். துத்தநாகம் குறைவாக உள்ள மண்ணிற்கு ஹெக்டேருக்கு, 25 கிலோ துத்தநாக சல்பேட் இட வேண்டும்.குன்றிய வளர்ச்சி, ஒரே மாதிரி பச்சைய குறைபாடுள்ள தாவரங்கள், மெலிதான தண்டு, வலை போன்ற அமைப்பு ஆகியவை கந்தக குறைபாட்டின் அறிகுறிகள் ஆகும். 'போரான்' குறைபாடு- இளம் இலைகளில் வளர்ச்சி தடைப்பட்டு குட்டையான புதர் அமைப்பை தரும். காய் வளர்ச்சி பாதிக்கப்பட்டு விதையில்லா காய்களை தரும். 'போரான்' குறைபாடு உள்ள வயலில், 10 கிலோ போராக்ஸ் மற்றும் 200 கிலோ ஜிப்சம் ஆகியவற்றை கடலை விதைத்த, 45வது நாளில் இடவேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை