உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உள் நோயாளிகளுக்கு உணவு : கிராம மக்களுக்கு நிம்மதி

உள் நோயாளிகளுக்கு உணவு : கிராம மக்களுக்கு நிம்மதி

மஞ்சூர் : மஞ்சூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. மஞ்சூர் மருத்துவமனையில் கூடுதல் கட்டட வசதி, போதுமான டாக்டர் மற்றும் பணியாளர்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மஞ்சூர் பகுதி மக்களின் கோரிக்கையை தொடர்ந்து, கடந்த சில ஆண்டுக்கு முன்பு 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 30 படுக்கையறை வசதி கொண்ட கட்டடம் கட்டப்பட்டது. தற்போது 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவமனைக்கு தேவையான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடுதல் டாக்டர் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மருத்துவமனையில் நாள்தோறும் 200க்கு மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர, தற்போது உள் நோயாளியாக சிகிச்சைக்கு வருபவர்களுக்கு உணவு வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் ரகுபாபு கூறுகையில், ''உள் நோயாளியாக சிகிச்சைக்கு வருபவர்களுக்கு தற்போது 3 வேளையும் உணவு வழங்கப்படுவதால் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் இனி வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டியதில்லை. மஞ்சூர் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்