உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனத்துறை நிலம் ஆக்கிரமிப்பு: ஆய்வு செய்து மீட்க தீர்மானம்

வனத்துறை நிலம் ஆக்கிரமிப்பு: ஆய்வு செய்து மீட்க தீர்மானம்

ஊட்டி: 'கேர்ன்ஹில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை வனத்துறை மீட்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க கூட்டம் நடந்தது. கேர்ன்ஹில் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான பகுதியை மீண்டும் சர்வே செய்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்க வேண்டும்; கின்னஸ் பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்; கலப்பட தேயிலைதூள் சோதனையை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்; பொதுமக்கள் காவல்துறை நல்லுறவு கூட்டங்கள் நடத்த வேண்டும்; சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே முனீஸ்வரர் கோவில் நடைபாதை சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க தலைவர் ஜனார்தனன் தலைமை வகித்தார். இணை செயலாளர் பிரபு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி