உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வேலை வாய்ப்பு உருவாக்ககட்டுமான பணிக்கான பயிற்சி

வேலை வாய்ப்பு உருவாக்ககட்டுமான பணிக்கான பயிற்சி

பந்தலூர் : பந்தலூர் அருகே தேவாலா பகுதியில் கட்டுமான பணிக்கான பயிற்சி முகாம் துவங்கியது. மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதியுதவியுடன், கூடலூர் 'பார்ம்- டூ' தொண்டு நிறுவனம் சார்பில் கட்டுமான பணிக்கான ஒரு மாத பயிற்சி முகாம் தேவாலா பகுதியில் துவங்கியது. எச்.ஏ.டி.பி. சமுதாய ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி வரவேற்றார். தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் ஜூட்மார்ட்டின் முன்னிலை வகித்து பேசுகையில், ''வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கிலும், இளைஞர்கள் வேலையில்லாமல் தனிமை படுத்தும்போது ஏற்படும் பல்வேறு தேவையற்ற செயல்பாடுகளை குறைக்கும் வகையிலும் இதுபோன்ற வாழ்க் கைக்கு உதவ கூடிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்கும் இளைஞர்கள் முறையாக கற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்திற்கு பயனுள் ளவர்களாக இருக்க வேண்டும்,'' என்றார். பயிற்சியாளர் சுப்பையா பயிற்சி அளிக்கிறார். ஒரு மாதம் நடக்கும் பயிற்சி முகாம் இறுதியில் அரசு சான்றிதழ், உதவித்தொகை வழங்கப்படும். எச்.ஏ.டி.பி. சமுதாய ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை