| ADDED : ஜூலை 17, 2011 01:27 AM
கூடலூர் : மேல் கூடலூர் புனித மரியன்னை பள்ளியில் பயிலும் 1500 மாணவர்களுக்கான ரத்த பரிசோதனை முகாம் நடந்தது. கூடலூர் ரேன்சம் மினிஸ்ட்ரீஸ்' இந்திய அறக்கட்டளை, கூடலூர் அரசு மருத்துவமனை சார்பில், மேல்கூடலூர் புனித மரியன்னை உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் ரத்த பரிசோதனை முகாம் பள்ளி வளாகத்தில் துவங்கியது. கூடலூர் அரசு மருத்துவமனை நம்பிக்கை மையத்தின் ஆலோசகர் தமிழ்செல்வி, லேப் டெக்னீஷியன் ஹரிபிரசாத், ஆலோசகர் பிரேம்குமாரி, மருத்துவ உதவியாளர் விஜயகுமார் கொண்ட குழுவினர் மாணவர்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டனர். பி.டி.ஏ., நிர்வாகி சந்திரன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ்ராஜ் தலைமை வகித்தார். அறக்கட்டளை நிறுவன தலைவர் தினகரன், ஒருங்கிணைப்பாளர் ஜேமஸ் முன்னிலை வகித்தார். கூடலூர் ஆர்.டி.ஓ., தனசேகரன் துவக்கி வைத்தார். விழாவில், கூடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுப்ரமணி, கூடலூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எடிசன் அற்புதராஜ், பள்ளி ஆசிரியர்கள், அறகட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர். பள்ளியை சேர்ந்த 1500 மாணவ மாணவியர் ரத்த பரிசோதனை செய்தனர்.