மேலும் செய்திகள்
பழைய மீன்கள் விற்ற வியாபாரிக்கு அபராதம்
14 minutes ago
ஊட்டி;ஊட்டி எப்பநாடு சாலையில், இரவு நேரத்தில் புலி நடமாடி வருவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.நீலகிரி வனக்கோட்டம், எப்பநாடு - - மொரக்குட்டி பகுதியில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அமைந்துள்ளது. வனத்தை ஒட்டி, தேயிலை தோட்டங்கள் நிறைந்துள்ளன. வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் புலி, கடந்த சில நாட்களாக தேயிலை தோட்டங்களில் பதுங்கி, அவ்வப்போது சாலையில் நடமாடி வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார்தேயிலை தொழிற்சாலைக்கு, பசுந்தேயிலையை வினியோகிக்க, விவசாயிகள் வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, சாலையில் நின்றிருந்த புலி அங்கிருந்து நகராமல் அதே இடத்தில் நீண்ட நேரம் நின்றுள்ளது. அச்சமடைந்த டிரைவர் விளக்கை அணைத்து வாகனத்தை இயக்காமல் நிறுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் புலி காட்டுக்குள் சென்றதை அடுத்து, வாகனத்தை இயக்கி சென்றுள்ளார்.தொழிற்சாலைக்கு பசுந்தேயிலையை வினியோகித்து திரும்பி வரும் போதும், அதே இடத்தில் புலி நின்று கொண்டிருந்ததை பார்த்து, மக்கள் பாதுகாப்பு கருதி, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
14 minutes ago