மேலும் செய்திகள்
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
15 hour(s) ago
குன்னுார்;நீலகிரியில் தேயிலை ஏலத்தில் வரத்து, விற்பனை அதிகரித்ததால் ஒரே வாரத்தில், 1.29 கோடி ரூபாய் மொத்த வருமானம் அதிகரித்தது.நீலகிரி மாவட்டத்தில் முக்கிய தொழிலான தேயிலை துாள் உற்பத்தி கடந்த சில மாதங்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்தது. குறைந்திருந்த பசுந்தேயிலை மகசூல், அவ்வப்போது பெய்யும் மழையால் அதிகரிக்க துவங்கியது. இதனால் கடந்த, 3 வாரங்களுக்கும் மேலாக தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை வரத்து அதிகரித்து உற்பத்தியும் உயர்ந்தது.இதனால், குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 25வது ஏலத்தில் தேயிலை துாள் வரத்து மற்றும் விற்பனை உயர்ந்தது.அதில், '11.40 லட்சம் கிலோ இலை ரகம், 3.89 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம் 15.29 லட்சம் கிலோ தேயிலை துாள் ஏலத்திற்கு வந்தது. '9.40 லட்சம் கிலோ இலை ரகம், 3.62 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம் 13.02 லட்சம் கிலோ தேயிலை துாள் விற்றது. 14.79 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. சராசரி விலை கிலோவுக்கு 113.60 ரூபாய் என இருந்தது. கடந்த வாரத்தை விட இந்த ஏலத்தில் 2.32 லட்சம் கிலோ வரத்து அதிகரித்தது. இரு வாரங்களை ஒப்பிடுகையில், 5 லட்சம் கிலோ தேயிலை துாள் அதிகமாக வந்துள்ளது. 1.25 லட்சம் கிலோ விற்பனை அதிகரித்தது. இதனால், சராசரி விலை குறைந்த போதும், 1.29 கோடி ரூபாய் மொத்த வருமானம் உயர்ந்தது.
15 hour(s) ago