உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போலி என்.ஐ.ஏ., அதிகாரிகள் 4 பேர் கைது ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க திட்டம்

போலி என்.ஐ.ஏ., அதிகாரிகள் 4 பேர் கைது ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க திட்டம்

பாலக்காடு; தேசிய விசாரணை ஏஜன்சி (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் எனக்கூறி, தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர்.கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குருடிக்காடு என்ற பகுதியில் என்.ஐ.ஏ.,வின் தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் என, ஸ்டிக்கர் ஒட்டிய கார் நிற்பதை கண்டனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால், இத்தகவலை புதுச்சேரி (கசபா) போலீசாரிடம் தெரிவித்தனர்.இன்ஸ்பெக்டர் சுஜித் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் எனக் கூறி, கொள்ளையடிக்க வந்து கும்பல் என்பது தெரியவந்தது.இதையடுத்து, அந்த காரில் இருந்த, கண்ணூரை சேர்ந்த பிரஜேஷ், 42, கூத்துபரம்பரை சேர்ந்த ஷிஜின், 36, ஆலப்புழா காயங்குளம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், 34, திருவனந்தபுரத்தை சேர்ந்த விஷ்ணுராஜ், 38, ஆகிய நால்வரை போலீசார் கைது செய்து, தொடர் விசாரணை மேற்கொண்டனர்.இன்ஸ்பெக்டர் சுஜித் கூறியதாவது:நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அளித்த தகவலின்படி, அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தியதில், கோவையில் இருந்து வரும் ஹவாலா பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் என்பதும் தெரிந்தது.என்.ஐ.ஏ., அதிகாரிகள் போன்று போலி அடையாள அட்டை, போலி ஸ்டிக்கர், போலி வாகன எண் கொண்ட கார் பயன்படுத்தி, தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை நடத்தியது தெரியவந்தது.மாநிலத்தின் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களின் இவர்கள் மீது, ஏராளமான வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரியவந்தது. இவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை