| ADDED : ஆக 18, 2024 01:34 AM
குன்னுார்;குன்னுார் அருகே, தேயிலை தோட்டத்தில், 12 அடி நீளம் மலைப்பாம்பு பிடிபட்டது.நீலகிரி மாவட்டம் குன்னூர் கொலக்கம்பை அருகே கோட்டக்கல் தேயிலை எஸ்டேட்டில் நேற்று, குடியிருப்பு அருகே மலைப்பாம்பு இருப்பதாக தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில், குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மலைப்பாம்பை பிடித்தனர். தொடர்ந்து, அருகில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.வனச்சரகர் ரவீந்திரநாத் கூறுகையில், ''குன்னூர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு 12 அடி நீளமுள்ள மலை பாம்பு தென்பட்டுள்ளது, மலைப்பாம்பை பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.'' என்றார்.நெஸ்ட் சுற்றுச்சூழல் அமைப்பு நிறுவன தலைவர் சிவதாஸ் கூறுகையில், நீலகிரியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு மழையின் தாக்கம் அதிகரித்து வன வளம் பெருகி வருகிறது. இதன் காரணமாக, மலை பாம்பு, கிங் கோப்ரா உள்ளிட்ட ஊர்வனங்கள், யானை, சிறுத்தை, கரடி, மான் உட்பட வன விலங்குகளின் வாழ்வாதாரத்திற்கு வழி கிடைத்துள்ளது. புலியின் வாழ்விடமாகவும் மீண்டும் இப்பகுதி இருக்கும், என்றார்.