உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கரோலினா சாலையில் தடுப்பு சுவர் அவசியம்

கரோலினா சாலையில் தடுப்பு சுவர் அவசியம்

குன்னுார்:குன்னுார் கரோலினாவில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தடுப்பு சுவர் அமைக்காததால், சாலை துண்டிக்கும் அபாயம் உள்ளது.குன்னுாரில் கடந்த ஆண்டு அக்., மாதம் இறுதியில் பெய்த கன மழையில், கரோலினா கிராமம் செல்லும் சாலையோரத்தில் புது காலனி பகுதியில், 150 அடி வரை மண்சரிவு ஏற்பட்டது.மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் ஆய்வு செய்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். எனினும் இதுவரை தீர்வு காணப்படவில்லை.இந்த சாலையில் லாரிகள் உட்பட கனரக வாகனங்கள் நாள்தோறும் வந்து செல்கிறது. இதனால் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சாலையில் சிறிது சிறிதாக பள்ளம் ஏற்பட்டு வருகிறது தற்போது, மழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் இந்த பகுதியில் மீண்டும் மண் சரிவு பட்டு கிராமம் துண்டிக்கும் அபாயம் உள்ளது.இப்பகுதியை சேர்ந்த மூர்த்தி கூறுகையில் ''இந்த பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு வருவதால், சாலை துண்டிக்கும் அபாயம் உள்ளது. இதனால் விவசாய தோட்ட பணிகளும் மேற்கொள்ள முடியாமல் உள்ளது. எனவே, பேரிடர் நிதியில் தடுப்பு சுவர் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி