மேலும் செய்திகள்
நிழற்குடைகளில் போஸ்டர் ஒட்டினால் நடவடிக்கை
03-Dec-2024
பந்தலுார்; பந்தலுார் அருகே எருமாடு, 'ஸ்கூல் ஜங்சன்' பகுதியில் நிழற்கூரை புதர் சூழ்ந்து பயன் இல்லாமல் காணப்படுகிறது.எருமாடு ஸ்கூல் ஜங்சன் பகுதியில் இருந்து, கள்ளிச்சால், மாதமங்களம், அய்யன்கொல்லி, காரக்கொல்லி, அத்திச்சால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை ஓரத்தில் சேரங்கோடு ஊராட்சி மூலம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர், பயணிகள் நிழற்கூரை அமைக்கப்பட்டது. இங்கு எந்த வாகனங்களும் நின்று செல்லாத நிலையில், பொதுமக்கள் யாரும் இதனை பயன்படுத்துவதில்லை.இதனால், நிழற்கூரை முழுவதும் புதர்கள் சூழ்ந்து, இந்த பகுதிக்கு வேலைக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. எனவே, இதனை முழுமையாக சீரமைத்து இந்த இடத்தில் வாகனங்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
03-Dec-2024