மேலும் செய்திகள்
பழங்குடியினர் கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு
3 hour(s) ago
குன்னுார்;குன்ன்னுார் வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுக்கள் பதிவு செய்ய வலியுறுத்தி, நேற்று கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.வரும் லோக்சபா தேர்தலில், 100 சதவீத ஓட்டுக்கள் பதிவு செய்ய வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, குன்னுார் பஸ் ஸ்டாண்ட் புறக்காவல் நிலையம் பகுதியில் வருவாய் துறை சார்பில் நேற்று கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. குன்னுார் தாசில்தார் கனி சுந்தரம் முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து வருவாய் துறையினர், வாக்காளர்கள் என பலரும் கையெழுத்திட்டனர். ஏற்பாடுகளை வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள்; உதவியாளர்கள் செய்திருந்தனர்.
3 hour(s) ago