மேலும் செய்திகள்
பராமரிப்பில்லாத நகராட்சி லாரி கண்டு கொள்ளாத நிர்வாகம்
1 hour(s) ago
ரூ.2.66 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
1 hour(s) ago
ரூ.1.25 கோடியில்புதிய நுாலக கட்டடம்
1 hour(s) ago
கூடலுார்;கூடலுார் கீழ்நாடுகாணி அருகே, மாநில எல்லையில் மரம் விழுந்ததால், 3 மாநிலங்களிடையே ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தமிழக- கேரளா எல்லையான கீழ்நாடுகாணி அருகே நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, சாலையில் மரம் விழுந்தது. எனினும், வாகனங்கள் செல்ல இடைவெளி இருந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், மரத்தால் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை இருந்தது. தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின், தீயணைப்பு வீரர்கள், நெடுஞ்சாலை துறையினர், காலை, 9:00 மணிக்கு அப்பகுதிக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.இதனால், வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நீலகிரி, கேரளா, கர்நாடக இடையே இயக்கப்படும் வாகனங்கள் சாலையின் இரு புறமும் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு வீரர்கள், ஒன்றரை மணி நேரம் போராடி, மரத்தை அகற்றி போக்குவரத்து சீரமைத்தனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago