உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மெட்ரிக் பள்ளிகளின் கட்டண விபரம் அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை

மெட்ரிக் பள்ளிகளின் கட்டண விபரம் அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை

ஊட்டி;நீலகிரி மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டண பட்டியலை, பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஊட்டியில், நீலகிரி மாவட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் காலாண்டு ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தலைமை வகித்து பேசியதாவது:மாவட்ட அளவில் எரிவாயு முகவர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம், நான்காவது வாரத்தில் நடத்தப்படும். மாவட்டத்திலுள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், பள்ளி அறிவிப்பு பலகை மூலம் தெரியப்படுத்த முதன்மை கல்வி அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். காய்கறி மற்றும் பழக்கடைகளில் விலைப்பட்டியல் வைக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம், கடை உரிமையாளர்களுக்கு தோட்டக்கலை துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட, கட்டபெட்டு பகுதியில் நிழற்குடை மற்றும் பொது கழிப்பிடம் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.போக்குவரத்து வசதி, குடிநீர், கழிப்பறை மற்றும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை குறித்து, பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அரசு துறை அலுவலர்கள், நுகர்வோர் அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி