உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வெப்பத்தால் சாதனங்கள் செயலிழப்பு என்பது நம்பும்படியாக இல்லை அ.தி.மு.க., வேட்பாளர் குற்றச்சாட்டு

வெப்பத்தால் சாதனங்கள் செயலிழப்பு என்பது நம்பும்படியாக இல்லை அ.தி.மு.க., வேட்பாளர் குற்றச்சாட்டு

ஊட்டி;''வெப்பம் காரணமாக சாதனங்கள் செயலிழந்தது என்பது நம்பும்படியாக இல்லை,'' என, அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் கூறினார். நீலகிரி லோக்சபா தொகுதிக்கான ஓட்டுப்பதிவு ஏப்., 19ம் தேதி நடந்தது. 1,619 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு, ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட்ட 'ஸ்ட்ராங் ரூமில்' வைக்கப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டது. ஸ்ட்ராங் ரூம் வளாகத்தை சுற்றி, 180 சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டு, போலீசார் கட்டுப்பாட்டு அறை மூலம், கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, சி.சி.டி.வி., கேமரா பதிவுகள் திடீரென டி.வி., திரையில் ஒளிபரப்பாகாமல் போய்விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து அங்குள்ள தொழில் நுட்ப பிரிவு அலுவலர் களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரி அருணாவும் அங்கு சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில், அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன், நேற்று மாலை ஓட்டு எண்ணும் மையத்தை பார்வையிட்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது: இங்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் நேற்று (நேற்று முன்தினம்) மாலை, 6:17 மணி முதல் 6.43 மணி வரை கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்துவிட்டன. 'அதிக வெப்பம் காரணமாக சூடானதால் இந்த பிரச்னை ஏற்பட்டது,' என, தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது நம்பும் படியாக இல்லை. தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் சரியாக வேலை செய்து வரும் நிலையில், இங்கு ஏற்பட்டுள்ள பிரச்னை சந்தேகத்தை கிளப்புகிறது. சரியான விளக்கம் கிடைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை