உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தடகளப் போட்டியில் அன்னுார் வீரர்கள் சாதனை

தடகளப் போட்டியில் அன்னுார் வீரர்கள் சாதனை

அன்னுார்;மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில், அன்னுார் வீரர்கள் பதக்கம் வென்றனர். ஈரோடு மாவட்டம், சென்னிமலையில், காந்தி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் அன்னுார் அத்லெட்டிக் கிளப் வீரர்கள் பங்கேற்றனர்.அன்னுாரை சேர்ந்த நேஹரிகா 16 வயதிற்குட்பட்ட சிறுமியருக்கான தட்டெறிதலில் 27 மீ., எறிந்து முதலிடமும், குண்டெறிதலில் 8.30 மீ., எறிந்து, மூன்றாம் இடமும் பெற்றார்.16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான போட்டியில், தட்டு எறிதலில் இனியவன் 42.29 மீ., தூரம் எறிந்து இரண்டாம் இடம் பெற்றார். 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டு எறிதல் போட்டியில், 35 மீ., தூரம் எறிந்து சங்கர் இரண்டாம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற வீரர்களை, அன்னுார் அத்லெட்டிக் கிளப் தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் ஈஸ்வரன், பயிற்சியாளர் ரவி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ