உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விண்ணேற்பு பெருவிழா ஜொலிக்கும் தேவாலயம்

விண்ணேற்பு பெருவிழா ஜொலிக்கும் தேவாலயம்

ஊட்டி;நீலகிரியின் முதல் கத்தோலிக்க பேராலயமான செயின்ட் மேரீஸ் ஆலயம், ஊட்டி மேரீஸ் ஹில் பகுதியில் உள்ளது. ஆலயத்தின், 186-வது ஆண்டு விழா கடந்த, 4ம் தேதி தொடங்கியது. உதவி பங்கு குரு டிக்சன் ஜான் ரோசரியோ, ஆங்கில திருப்பலியை நிறைவேற்றினார். பின், தமிழ் மற்றும் மலையாளத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. 15ம் தேதி சுதந்திர தினத்தன்று அன்னையின் விண்ணேற்பு பெருவிழா மற்றும் பங்கு திருவிழா ஆகியவை, மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில் நடக்கிறது. விழாவையொட்டி மேரீஸ் ஆலயம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி