மேலும் செய்திகள்
கட்டட கழிவால் பாதிப்பு
22-Dec-2025
சிறுத்தை உலா
22-Dec-2025
பந்தலுார்:பந்தலுார் அருகே, தேவாலா ஹட்டி பகுதியில்ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த, 31ல் பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தகுமாரி, மேலாண்மை குழு தலைவி ராஜாமணி, தற்காலிக ஆசிரியர் தமிழ் செல்வன் உட்பட பலர் பள்ளியில் மாணவர் சேர்க்கையைவலியுறுத்தி, அங்குள்ள கிராம பெற்றோரிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தினர்.அப்போது, அந்த வழியாக, தி.மு.க.,வை சேர்ந்த கவுன்சிலர் ஆலன், கவுன்சிலர் புவனேஸ்வரி என்பவரின் கணவர் செல்வராஜ் உட்பட சிலர் வந்துள்ளனர்.அதில், செல்வராஜ் என்பவர், 'நீங்கள் அ.தி.மு.க., வுக்கு ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளீர்கள்,' என, தெரிவித்துள்ளார். பள்ளி நிர்வாகிகள், அவரிடம் துண்டு பிரசுரங்களை காண்பித்தனர். அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த தி.மு.க.,வினர், ஆசிரியர் தமிழ்செல்வனை தாக்கி அவரின் மொபைல் போனை பறித்துள்ளனர். காயம் அடைந்த ஆசிரியர் தமிழ்ச்செல்வன் பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தியாகராஜாமற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், தி.மு.க. வினர் மீது போலீசில் புகார் அளிக்க சென்றனர். அப்போது இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், பி.டி.ஏ., தலைவர் மற்றும்பெற்றோரை அங்கிருந்து துரத்தினார். மேலாண்மை குழு நிர்வாகிகள் இருவரிடம் மட்டும் விசாரணை மேற்கொண்டதுடன், 'மாண வர் சேர்க்கை பணிக்கு உரிய அனுமதி பெற்று செல்ல வேண்டும்,' என்றார். இன்ஸ்பெக்டர் நடவடிக்கைக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை தலைமை ஆசிரியர் சமாதானப்படுத்தினார். இதை தொடர்ந்து, இரு தரப்பிலும் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஆசிரியர் தமிழ்செல்வன், தலைமை ஆசிரியரின் கணவர் ஜான்சாமுவேல்; கவுன்சிலர் ஆலன், செல்வராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
22-Dec-2025
22-Dec-2025