மேலும் செய்திகள்
பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
23 hour(s) ago
வீட்டை இடித்த யானைகள்; வனத்துறையினர் ஆய்வு
23 hour(s) ago
அணைகள் நீர்மட்டம்
23 hour(s) ago
தென் மாநில தேயிலை ஏலங்களில் சரிவு
23 hour(s) ago
குன்னுார் : ஜெகதளாவில் வார்டு பணிகளை செய்ய கோரி அதிகாரியை மக்கள் முற்றுகையிட்டனர். ஜெகதளா பேரூராட்சி, 11வது வார்டில், சுற்றுலாத்துறை அமைச்சர் பரிந்துரையின் பேரில், எஸ்.ஏ.டி.பி., நிதியின் கீழ் கழிவு நீர் கால்வாய், நடைபாதை அமைக்க, 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய பிப்., மாதம் டெண்டர் விடப்பட்டது. ஆனால், பணிகள் நடைபெறாத நிலையில், தேர்தல் முடிந்ததும் பணி துவங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல, கரிமொரா காலனி நடைபாதை பணியும் துவங்கவில்லை.இது தொடர்பாக, குன்னுாரில் நடந்த 'உங்களை தேடி உங்கள் ஊரில் ' திட்டத்திற்கு வருகை தந்த கலெக்டர் உட்பட அதிகாரிகளிடம், 'பேரூராட்சி தலைவர் மற்றும் அவரது சகோதரர் செயல் அலுவலரை மிரட்டி பணியை நிறுத்தி வைத்துள்ளனர்,' என, வார்டு கவுன்சிலர் பிரமிளா புகார் தெரிவித்து மனு கொடுத்தார்.இந்நிலையில், நேற்று கலெக்டர் உத்தரவால் பஞ்., அலுவலகம் வந்த பஞ்சாயத்து இணை இயக்குனரை மக்கள் முற்றுகையிட்டு வளர்ச்சி பணிகளை துவங்க வலியுறுத்தினர். அதிகாரிகள் கூறுகையில், 'இரண்டு நாட்களில் பணிகள் துவக்கப்படும்,' என்றனர். 'பணிகள் துவங்காவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்,' என, தெரிவித்தனர்.
23 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago