மேலும் செய்திகள்
காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு
6 hour(s) ago
தீபாவளி அமாவாசை பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு
6 hour(s) ago
சாலையை சீரமைத்த இளைஞர்கள்
8 hour(s) ago
பந்தலுார் : கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிகாடு மற்றும் ஆனக்கயம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த வாரம் 'நிபா' வைரஸ் தாக்கம் ஏற்பட்டது. அதில், செம்பரச்சேரி பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுவன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தான். தொடர்ந்து, வைரஸ் பரவிய பகுதிகளில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் கூட்டமாக கூடவும் தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், தமிழக- கேரள எல்லையில் உள்ள பந்தலுார் பகுதி சோதனை சாவடிகளில், மாநில சுகாதார துறையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகப்படும் நபர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.தற்போது, வைரஸ் தாக்கம் குறைந்து வரும் நிலையில், தமிழக- கேரள எல்லையான பந்தலுார் எருமாடு பகுதியில், வியாபார குடியிருப்புகளை ஒட்டிய பகுதியில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் மரங்களில் காணப்படுகின்றன. இதனால், இந்த பகுதி மக்கள் நிபா அச்சத்தில் உள்ளனர்.மக்கள் கூறுகையில், 'இந்த பகுதிகளில் உள்ள பழக்கடைகள் மற்றும் குடியிருப்புகளை ஒட்டிய தோட்டங்களில், அதிகாரிகள் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் நோய் பாதிப்பை தடுக்க வேண்டும்,' என்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
8 hour(s) ago