உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சுற்றுலா வாகனம் மோதி பைக்கில் சென்றவர் பலி

சுற்றுலா வாகனம் மோதி பைக்கில் சென்றவர் பலி

கோத்தகிரி:கோத்தகிரி அருகே சுற்றுலா வாகனம் மோதியதில், பைக்கில் சென்றவர் பலியானார்.கோத்தகிரி நியாங் பகுதியை சேர்ந்த புலேந்திரன், 25. மினி பஸ் டிரைவரான இவருக்கு திருமணமாகவில்லை. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில் ஊட்டியில் இருந்து, வீட்டிற்கு இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, கட்டபெட்டு பகுதியில் எதிரே வந்த சுற்றுலா வாகனம் மோதியதில், துாக்கி வீசப்பட்ட புலேந்திரன் படுகாயம் அடைந்தார். கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியில் உயிரிழந்தார்.கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து, திருவாரூர் பகுதியை சேர்ந்த சுற்றுலா வாகன டிரைவர் கணேஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ