உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த பொருட்கள் பறிமுதல்

ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த பொருட்கள் பறிமுதல்

கூடலுார் : உரிய ஆவணம் இன்றி பா.ஜ., மற்றும் சுயே., வேட்பாளர்கள் பிரசாரத்துக்கு எடுத்து வந்த பொருட்களை, கூடலுாரில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.கூடலுார் ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, சில்வர் கிளவுட் அருகே, தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம், வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தனர். அதில், முறையான ரசீது இன்றி பா.ஜ., பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடிய கொடிகள், தொப்பிகள், முகமூடிகள் எடுத்து வந்தது தெரியவந்தது. அதனை கைப்பற்றி, மேல் விசாரணைக்காக, கூடலுார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.* கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட், பகுதியில் மதியம், தேர்தல் பறக்கும் படையினர், சுயேட்சை வேட்பாளர் விஜயகுமார் பிரசார வாகனத்தில் சோதனை மேற்கொண்டனர். அதில், சில வாசகங்கள் அடங்கிய, 120 சட்டைகள், துண்டு பிரசுரங்கள், பதாகைகள் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்ததும் தெரிய வந்தது. உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட பொருள்களை வாகனத்துடன் பறிமுதல் செய்து விசாரணைக்காக, கூடலுார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி