உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அதிகரிக்கும் பார்த்தீனியம் செடிகளால் ஆபத்து

அதிகரிக்கும் பார்த்தீனியம் செடிகளால் ஆபத்து

கூடலுார் : முதுமலை வனத்தில் அதிகரித்து வரும் பார்த்தீனியம் செடிகளால், வன விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.முதுமலை புலிகள் காப்பகத்தில் கோடை வறட்சி முடிந்து, வனம் பசுமைக்கு மாறி, வனவிலங்குகளுக்கு உணவு குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளது.இந்நிலையில், வனப்பகுதியில் பார்த்தீனியம் செடிகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் மற்ற தாவரங்கள் புற்கள் வளர்வதில்லை. இதனால், வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த செடிகளின் பூக்களால் மனிதர்களுக்கு மட்டுமின்றி வனவிலங்குகளுக்கும் சுவாசம் தொடர்பான நோய்கள், ஒவ்வாமை போன்ற பாதிப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது.சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'வனப்பகுதியில், பார்த்தீனியம் செடிகள் பரப்பளவு அதிகரித்து வருவதால், அப்பகுதியில் தாவர உண்ணிகள் விரும்பி உண்ணும் தாவரங்கள் பரப்பளவு குறைந்து, உணவு தட்டுப்பாடு அபாயம் உள்ளது. எனவே, இச்செடிகளை வேரோடு அகற்றி, அதன் வளர்ச்சியை தடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை