உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

கூடலுார், : கூடலுார் பகுதியில் மக்களை அச்சுறுத்தி வரும் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் காட்டிலிருந்து, குடியிருப்புகள் நுழைவதை தடுக்க வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் மணி தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், 'யானை உள்ளிட்ட வனவிலங்குகள் காடுகளிலிருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும்; காலியாக உள்ள வன ஊழியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; யானைகளால் விவசாய விளைப் பயிர்கள் பாதிக்கப்படும் அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்; யானை தாக்கி உயிரிழக்கும் குடும்பத்தினருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில், விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் வாசு, கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், கூடலுாரி ஏரியா கமிட்டி செயலாளர் சுரேஷ், நிர்வாகிகள் தங்கராஜ் குஞ்சுமுகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை