மாவட்ட இளைஞர் கலை போட்டி சாதித்த கலைஞர்களுக்கு பரிசு
ஊட்டி;தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை, கோவை மண்டலம் கலை பண்பாட்டு மையம் சார்பில், கடந்த, பிப்.,25ம் தேதி, ஊட்டி கலை கல்லுாரியில், மாவட்ட அளவிலான இளைஞர் கலைப் போட்டி நடந்தது.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கலைஞர்கள் பலர் பங்கேற்றனர். இதில், குரல் இசை, கருவி இசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு முறையே, 6,000 ரூபாய், 4,500 மற்றும் 3,500 ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. மேலும், பொன்னாடை அணிவித்து, சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இதில், கோவை கலை பண்பாட்டு மைய மண்டல உதவி இயக்குனர் நீலமேகன், உட்பட, அலுவலர்கள் மற்றும் வெற்றி பெற்ற கலைஞர்கள் பங்கேற்றனர்.