உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குடிநீர் வினியோகத்தில் குளறுபடி; மறியலில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு

குடிநீர் வினியோகத்தில் குளறுபடி; மறியலில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு

குன்னுார் : குன்னுார் குமரன் நகர் பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வது வார்டு குமரன் நகர் பகுதி இங்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யாததால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, 7:00 மணி அளவில் மவுண்ட் ரோட்டில் திடீரென மகளிர் உட்பட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.உடனடியாக அங்கு வந்த போலீசார் அவர்களை அங்கிருந்து கலைத்து போக்குவரத்தை சீரமைத்தனர்.போலீசாரிடம் மக்கள் கூறுகையில்,'ஆறு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் ஒரு மணி நேரம் மட்டுமே மிகவும்குறைந்த அழுத்தத்துடன் வழங்குவதால் பல வீடுகளுக்கும் குடிநீர் கிடைப்பதில்லை.இது குறித்து நகராட்சிக்கு பலமுறை தெரிவித்தோம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,'' என்றனர். போலீசார் கூறுகையில்,''போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தால் நாங்களே நகராட்சிக்கு அழைத்து சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். சாலையில் மறியல் செய்தால் அனைவரையும் கைது செய்வோம்,' என்றனர். 'உரிய முறையில் குடிநீரை வழங்காவிட்டால் நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்,' என, தெரிவித்த மக்கள் அங்கிருந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி