உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தி.மு.க., வேட்பாளர் ராஜா ஊட்டியில் இறுதி கட்ட பிரசாரம்

தி.மு.க., வேட்பாளர் ராஜா ஊட்டியில் இறுதி கட்ட பிரசாரம்

ஊட்டி, : நீலகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜன், நேற்று கடநாடு, எப்பநாடு, கூக்கல்தொரை, தும்மனட்டி, நொண்டிமேடு, காந்தள் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். இறுதி கட்ட பிரசாரத்தை ஊட்டி மெயின் பஜாரில் நிறைவு செய்யும் போது பேசுகையில்,''நீலகிரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஐந்தாண்டு காலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் எண்ணற்ற திட்டங்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னைகளும் தீர்க்கப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் நீலகிரி தொகுதி மக்கள் என்னை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். அதேபோல், இம்முறையும் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தேயிலைக்கான குறைந்த பட்ச ஆதாரவிலை; கூடலுாரில் செக்ஷன்-17 பிரச்னை; படுகரின மக்களை எஸ்.டி., பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் தீர்த்து தருவேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ