மேலும் செய்திகள்
பழைய மீன்கள் விற்ற வியாபாரிக்கு அபராதம்
17 minutes ago
பந்தலுார்;பந்தலுார் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் காரில் எடுத்து சென்ற, தி.மு.க.,வின் துண்டு பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மாநில எல்லையில் உள்ள பந்தலுார் பகுதியில், ஓட்டுச்சாவடி மையங்களில், தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், ஒரு சில ஓட்டுச்சாவடி மையத்தில் போதிய அளவு மின்விளக்கு வசதி இல்லாததுடன், கழிவறை மற்றும் தண்ணீர் வசதி இல்லாததும் தெரிய வந்தது. இவற்றை உடனடியாக சரி செய்யுமாறு அறிவுறுத்தினர்.தொடர்ந்து, மாநில எல்லை சோதனை சாவடிகளான நம்பியார்குன்னு, பாட்டவயல் சோதனை சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், தமிழக எல்லைக்குள் நுழையும் வாகனங்களை ஆய்வு செய்ததில், நம்பியார்குன்னு சோதனை சாவடியில்,பந்தலுார் பகுதியை சேர்ந்த ஒரு காரில் தி.மு.க.,வின் பிரசார துண்டு பிரசுரங்கள், கவர்கள், கொடி ஆகியவை வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததுடன், டிரைவர் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேர்தல் அலுவலர் கவுசிக் கூறுகையில், ''24 மணி நேரமும் அனைத்து வாகனங்களும், ஆய்வு செய்யப் படும்.தேர்தல் விதிமுறை மீறி வரும் வாகனங்கள் மீதும் அதன் உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
17 minutes ago