உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குடிநீர் தட்டுப்பாடு முன்னேற்பாடு அவசியம்

குடிநீர் தட்டுப்பாடு முன்னேற்பாடு அவசியம்

குன்னுார்:குன்னுாரில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.குன்னுார் நகராட்சியில், 30 வார்டுகளுக்கு குடிநீர் ஆதாரமான ரேலியா அணை மற்றும் எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து, 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.தற்போது, கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாடு துவங்கியுள்ளது. 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது, 5 நாட்களுக்கு மேல் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.43.6 அடி உயரம் கொண்ட ரேலியா அணையில், தற்போது, 36 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. வரும் ஏப்., மே மாதங்களுக்கு இந்த நீர் போதுமானதாக இருக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் வருவதற்கு முன்பு கரன்சி, ஜிம்கானா, பந்துமை, ஹைபீல்டு உள்ளிட்ட தடுப்பணைகளில் இருந்து தினமும், மோட்டார் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால். ஜிம்கானா குடிநீர் நிலையம், சிம்ஸ் பார்க் அருகே உள்ள குடிநீர் தொட்டி பராமரிப்பு இல்லாமல் பூட்டப்பட்டு பயனின்றி கிடக்கிறது.எனவே, வரும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு பெருமளவில் ஏற்படாமல் இருக்க ஜிம்கானா உட்பட மற்ற தடுப்பணை, நீரேற்று நிலைய தொட்டிகளை பராமரித்து குடிநீர் வினியோகத்தை தடையின்றி மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்