மேலும் செய்திகள்
பராமரிப்பில்லாத நகராட்சி லாரி கண்டு கொள்ளாத நிர்வாகம்
7 hour(s) ago
ரூ.2.66 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
7 hour(s) ago
ரூ.1.25 கோடியில்புதிய நுாலக கட்டடம்
7 hour(s) ago
ஊட்டி:நீலகிரி லோக்சபா தொகுதியில் பறக்கும் படை எண்ணிக்கை, 72 ஆக உயர்த்தப்பட்டதை அடுத்து வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது.நீலகிரி லோக்சபா தொகுதியில் ஊட்டி, குன்னுார்,கோத்தகிரி, மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.அதில், ஊட்டி, கூடலுார், குன்னூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் தற்போது, '9 பறக்கும் படை குழுக்கள்; 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள்,' என, மொத்தம், 57 குழுக்கள் இயங்கி வந்தன. சில பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் சுணக்கம் காட்டுவதாக புகார் வந்துள்ளது. இந்நிலையில், 'குஞ்சப்பனை சோதனை சாவடியில் எம்.பி., ராஜாவின் வாகனத்தை முறையாக சோதனை செய்யவில்லை,' என, பறக்கும் படை பெண் தேர்தல் அதிகாரி சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பின், தேர்தல் செலவின பார்வையாளர் கிரண் அவர்களின் அறிவுரைப்படி, நீலகிரி (தனி) லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை தீவிரமாக கண்காணிக்க ஏதுவாக, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் கூடுதலாக தலா, 3 பறக்கும் படை குழுக்கள் மற்றும் ஒரு 'வீடியோ' கண்காணிப்பு குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.மேலும், கூடலுார் சட்டசபை தொகுதியில் கூடுதலாக மூன்று நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது. இதன் மூலம் தற்போது, நீலகிரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி, கூடலுார், குன்னுார் ஆகிய சட்ட சபை தொகுதிகளில் பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவின் மொத்த எண்ணிக்கை, 72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் செலவின பார்வையாளர் கிரண் உத்தரவுப்படி, நேற்று தலைக்குந்தா உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago