உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பா.ஜ.,வில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்த வலியுறுத்தல்

பா.ஜ.,வில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்த வலியுறுத்தல்

குன்னுார்:'நீலகிரியில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், பா.ஜ., தொண்டர்களிடையேஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில் மத்திய இணை அமைச்சர் முருகன்; தி.மு.க., வில் சிட்டிங் எம்.பி., ராஜா; அ.தி.மு.க.,வில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிடுவதால், வி.ஐ.பி., தொகுதியாக மாறி உள்ளது. இந்நிலையில், நீலகிரி தொகுதியை பா.ஜ., கைப்பற்றும் வகையில், லோக்சபா மற்றும் சட்டசபை பிரிவுகளுக்கு தலா, 60 பேர் கொண்ட கமிட்டிகள் அமைத்து தீவிரமாக பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் சிலர் கூறுகையில்,'நீலகிரி தொகுதியில் ஏற்கனவே, பா.ஜ., வெற்றி பெற்றுள்ளதால், இம்முறை மீண்டும் கைப்பற்றும் நடவடிக்கையை கட்சி மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது.இந்நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள தொண்டர்களிடையே, கட்சியின் தகவல்களை முழுமையாக கொண்டு செல்வதற்கான பணிகளை இனியும் வேகப்படுத்த வேண்டும். அதற்கு கூடுதலாக, தகவல் தொடர்பு நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். தற்போது, படுக இன மக்கள் உட்பட பெரும்பாலான மலை மக்களின் ஆதரவு அதிகரித்து வருவதால், அனைத்து தொண்டர்களின் ஒருங்கிணைப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை