உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வயநாடு அருகே வெடிபொருள் கண்டுபிடிப்பு; நக்சல்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

வயநாடு அருகே வெடிபொருள் கண்டுபிடிப்பு; நக்சல்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

பந்தலுார் : கேரளா மாநிலம் வயநாட்டில் காணப்பட்ட கண்ணிவெடி சம்பந்தமாக, நக்சல்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீலகிரி மாவட்ட எல்லையில்,கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கிமலை, கம்பமலை, கொட்டியூர், அம்பாயத்தோடு, பால்சுரம் பகுதிகளில் நக்சல்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. மேலும், தேர்தல் சமயத்தில் இந்த பகுதியில் நக்சல்கள், சோமன், தினேஷ், மொய்தீன் ஆகியோர் கம்பமலை எஸ்டேட் பகுதிக்கு வந்து, ஓட்டளிப்பதற்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த, 26 ஆம் தேதி மத்திய மலை அருகே கொடக்காடு என்ற இடத்தில் வனப்பகுதியில், போலீசார் மற்றும் வனத்துறையினர் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு மண் அகற்றப்பட்டு கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, வெடி மருந்து தடுப்பு பிரிவினர் வந்து, கண்ணிவெடிகளை செயலிழக்க செய்து, டெட்டனேட்டர்கள், அவற்றோடு இணைக்கப்பட்ட மின்சார ஒயர்கள், வெள்ளை கல் துகள்கள், ஆணிகள் இணைக்கப்பட்ட வெடி மருந்து பொருட்கள் கைப்பற்றினர். மேலும், நக்சல்கள் எழுதிய கடிதங்கள், நக்சல்களுக்கு எதிராக செய்தி வெளியான செய்தித்தாள்கள் வெடி மருந்துகளுக்கு அடியில் வைக்கப்பட்டு இருந்தது.போலீசார் கூறுகையில், 'இந்த பகுதியில் தண்டர்போல்ட் அதிரடிப்படையினர் அடிக்கடி ஆய்வு பணியில் ஈடுபடும் நிலையில், போலீசார் மீது தாக்குதல் நடத்துவதற்காக, நச்சல்கள் கண்ணிவெடிகளை இந்தப் பகுதியில் புதைத்து வைத்திருக்க கூடும். இது தொடர்பாக நச்சல்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, மக்கிமலை மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் உளவுத்துறை போலீசார் மற்றும் தண்டர்போல்ட் அதிரடிப்படையினர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்,' என்றனர்.இந்நிலையில், தமிழக எல்லையோர வனப்பகுதிகள், போலீசார் மற்றும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை