உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அமைச்சரின் ஊரில் திறக்கப்படாத உழவர் சந்தை; சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம்

அமைச்சரின் ஊரில் திறக்கப்படாத உழவர் சந்தை; சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம்

குன்னுார் : குன்னுாரில் சுற்றுலாத் துறை அமைச்சரின் சொந்த ஊரில் அமைக்கப்பட்ட உழவர் சந்தை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட், உருளைகிழங்கு, பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலை தோட்ட காய்கறிகள் விவசாயத்திற்கு விவசாயிகள் முக்கியத்துவம் தருகின்றனர். உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளை சந்தைப்படுத்த மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். சிறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஊட்டி, குன்னுார், கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில் உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டன.இந்நிலையில், கடந்த, 2020ம் ஆண்டில், குன்னுார் அருகேயுள்ள எடப்பள்ளி பெட்டட்டி கிராமத்தில், 45 லட்சம் ரூபாய் செலவில் 'கிராம சந்தை' என்ற பெயரில் உழவர் சந்தை பணிகள் துவங்கப்பட்டது. இந்த பணிகள் நிறைவு பெற்ற நிலையில் கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது.சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் சொந்த ஊரில் உள்ள உழவர் சந்தை, சமூக விரோத கூடாரமாக மாறி உள்ளது.இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு பட்ஜெட்டில், 2 கோடி ரூபாய் மதிப்பில், எடப்பள்ளி கிராமத்தில் ஒருங்கிணைந்த வேளாண் சந்தை (மண்டி) அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, எடப்பள்ளியில், பெட்டட்டி சுங்கம் பகுதியில், வருவாய் துறைக்கு சொந்தமான 6.5 ஏக்கரில், ஏல மையம், 5 கடைகள், லாரிகள் நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. நீலகிரி விவசாயிகள் நல சங்க தலைவர் விஸ்வநாதன் கூறுகையில், ''எடப்பள்ளியில் உள்ள உழவர் சந்தை கட்டடங்கள் சுற்றிலும் முட்புதர்கள் சூழ்ந்துள்ளது.''சமீபகாலமாக, இந்த பகுதி, குடிகாரர்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் பயன்படுத்தும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது, இதேபோல வேளாண் சந்தையும் நடைமுறைக்கு வராமல் கிடப்பில் உள்ளது. இவற்றை திறந்து செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ