மேலும் செய்திகள்
நல் நுாலகர் விருது
13-Dec-2025
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
13-Dec-2025
அணைகள் நீர்மட்டம்
13-Dec-2025
பந்தலுார்:பந்துலுாரில் அனுமதியில்லாமல் இயங்கிய மனநல காப்பகம் தொடர்பாக, இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. பந்தலுார் அருகே பெக்கி என்ற இடத்தில், 1999 ஆம் ஆண்டு முதல் 'லவ் ஷேர்' என்ற பெயரில் அகஸ்டின் என்பவர் மனநல காப்பகம் நடத்தி வந்துள்ளார். இதற்கு அரசிடம் இருந்து, எவ்வித அனுமதியும் பெறவில்லை. இதை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி, கூடலுார் ஆர்.டி.ஓ. செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகள் கடந்த, 9-ம் தேதி நேரில் ஆய்வு செய்து காப்பகத்துக்கு சீல் வைத்தனர். வி.ஏ.ஓ., சண்முகம் நெலாக்கோட்டை போலீசில் புகார் செய்தார். புகார் தொடர்பாக, டி.எஸ்.பி.. தலைமையிலான போலீசார் கடந்த ஐந்து நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், 'சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதி இன்றி அறக்கட்டளை இயங்கி வந்துள்ளது; இதன் அருகே, 20 அறியப்படாத மன வளர்ச்சி குன்றிய நபர்கள் புதைக்கப்பட்டுள்ளனர்; இங்கு எந்த பதிவேடுகளும் பராமரிக்காமல் உள்ளது,' என, தெரியவந்தது. இதை தொடர்ந்து, காப்பகம் நடத்தி வந்த அகஸ்டின்,-54, அவரது மனைவி கிரேசி,53, ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
13-Dec-2025
13-Dec-2025
13-Dec-2025