உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மசினகுடியில் கரடி இறப்பு வனத்துறை விசாரணை

மசினகுடியில் கரடி இறப்பு வனத்துறை விசாரணை

கூடலுார்;மசினகுடி அருகே கரடி உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.முதுமலை மசினகுடி கோட்டம், மசினகுடி வனச்சரகம் மாயார் வனப்பகுதியில், நேற்று காலை வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது கரடி இறந்து கிடப்பது தெரியவந்தது. மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், மசினகுடி வனச்சகர் பாலாஜி அதன் உடலை ஆய்வு செய்தனர். முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் பிரேத பரிசோதனை செய்தார்.வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த பெண்கரடிக்கு, 10 வயது இருக்கும். வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, உணவு உண்ண முடியாமல் உயிரிழந்துள்ளது. ஆய்வக பரிசோதனைக்காக அதன் உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி