உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோக்கால் பகுதியில் புவியியல் துறையினர் ஆய்வு வீடுகளில் விரிசல் ஏற்பட்ட பகுதியில் அளவீடு

கோக்கால் பகுதியில் புவியியல் துறையினர் ஆய்வு வீடுகளில் விரிசல் ஏற்பட்ட பகுதியில் அளவீடு

கூடலுார்;மேல் கூடலுார் கோக்கால் அருகே வீடுகளில் விரிசல் ஏற்பட்ட பகுதியில், 10 நாளாக மத்திய புவியியல் துறையினர் ஆய்வு பணிகளை தொடர்ந்து வருகின்றனர்.மேல் கூடலுார் கோக்கால் பகுதியில் ஜூன், 27, 28ம் தேதிகளில் பெய்த பலத்த மழையின் போது, 'ஒன்றரை சென்ட்' குடியிருப்பு பகுதியில், 6 வீடுகள் மற்றும் முதியோர் இல்ல கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது.விரிசல் நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இப்பகுதியில், கடந்த, 7ம் தேதி முதல் மத்திய புவியியல் துறை ஆராய்ச்சியாளர் யுன்யோலோ டெப் தலைமையில் புவியியல் துறை அதிகாரிகள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.முதல் கட்டமாக, விரிசல் ஏற்பட்ட வீடு மற்றும் கட்டடங்கள், அப்பகுதியில் உற்பத்தியாகும் நீரோடைகளின் நீரோட்டம், கழிவுநீர், மழைநீர் வழிந்தோடும் வழிகளை ஆய்வு செய்தனர். 'நீரோட்டங்களை தடுக்க வேண்டாம்' என, அறிவுறுத்தினர்.தொடர்ந்து நவீன கருவிகள் மூலம் அப்பகுதியை, சர்வே செய்தனர். மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அப்பகுதியில் தொடர்ந்து விரிசல் ஏற்படுகிறதா என்பதை அறிய, ஐந்து இடங்களில் பூமியில் குழி தோண்டி சிறிய அளவிலான சிமென்ட் பில்லர் அமைத்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில், 10வது நாளாக நேற்று கட்டடங்கள்; நிலத்தில் ஏற்பட்ட விரிசலின் அளவுகள் குறித்து, அளவிடும் செய்யும் பணியில் புவியியல் துறையினர் ஈடுபட்டனர்.அதிகாரிகள் கூறுகையில், 'இப்பகுதியில் மத்திய புவியியல் துறையினர், தொடர்ந்து பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகள் மேலும் சில நாட்கள் தொடரும். அதிக மழையின் போது, அங்குள்ள ஐந்து வீடுகளில் வசிப்பவர்கள், 'இரவில், அங்கு தங்க வேண்டாம்,' என, அறிவுறுத்தியுள்ளனர்.முழுமையான ஆய்வு பணிகளை முடித்த பின், அதன் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில், அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ