| ADDED : ஜூலை 06, 2024 01:18 AM
ஊட்டி:தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊட்டி தோட்டக்கலைத்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 'புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,21 மாத கால நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர் புற நுாலகர்கள் உள்ளிட்ட காலம் முறை ஊதியம், தொகுப்பு ஊதியம், மதிப்பூதியம் பெறும், 3.5 லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியமும், ஓய்வூ தியமும் வழங்கிட வேண்டும். மேலும், சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக முறைப்படுத்த வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை காலம் முறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. வேளாண்மை பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.