உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்தலுார் அருகே மழையில் இடிந்த வீடு: உயிர் தப்பிய மூவர்

பந்தலுார் அருகே மழையில் இடிந்த வீடு: உயிர் தப்பிய மூவர்

பந்தலுார்:பந்தலுார் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.பந்தலுார் அருகே படைச்சேரி பகுதியில் ருக்மணி என்பவரது வீடு முழுமையாக இடிந்து விழுந்தது. வீட்டினுள் ருக்மணி மற்றும் அவரது மகன்கள் செந்தமிழன், ராமச்சந்திரன் ஆகியோர் உறங்கி கொண்டிருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்புகள் ஏற்படாமல் தப்பினர். இது குறித்து வருவாய் துறையினர் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.மேலும், சேலைக்குன்னா பகுதியில் பத்மநாபன் என்பவரின் வீடு பாதிக்கப்பட்டது. பிதர்காடு அருகே செருகுன்னு பகுதியில் ராமச்சந்திரன் என்பவரின் வீட்டுக்கு கூரை மீது பாக்கு மரம் முறிந்து விழுந்ததில் மேல்கூரை பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளிலும் வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி