மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி;ஊட்டியில் அனைத்து வகையான காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக உருளை கிழங்கு,பீன்ஸ்,கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பூண்டு, முட்டை கோஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் மலை காய்கறி அறுவடை குறைந்ததால் வரத்து குறைந்துள்ளது. தற்போது, ஊட்டி, கோத்தகிரி மற்றும் குன்னுார் உள்ளூர் மார்க்கெட்டில், 'ஒரு கிலோ பீன்ஸ், 80 ரூபாய்; உருளைக் கிழங்கு, 80, கேரட், 55, பீட்ருட், 55, பட்டாணி, 140 மற்றும் பூண்டு, 240 ரூபாய்,' என, விலை உயர்ந்துள்ளது.இதனால், மலை காய்கறிகளை பயிர் செய்த விவசாயிகளுக்கு, விலை உயர்வால் ஓரளவு லாபம் கிடைத்து வருகிறது. அதே நேரத்தில், ஏழை கூலித் தொழிலாளர்கள் மலை காய்கறிகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
03-Oct-2025