மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி:'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்' வங்கி மூலம், குறைந்த பிரீமியத்தில் விபத்து காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்' வங்கி, காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டுக்கு, 250, 555 மற்றும் 755 ரூபாய் பிரீமயத்தில், 10 லட்சம் மற்றும் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.சாமானிய மக்களுக்கும் விபத்து காப்பீடு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அஞ்சலகங்கள் (தபால்காரர் மற்றும் கிராம அஞ்சலக ஊழியர்கள்) மூலம் மிக குறைந்த பிரீமியம் தொகையுடன் கூடிய, இந்த விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த காப்பீடு திட்டத்தில், 18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். இத்திட்டத்தின் சிறப்பு அம்சம்:
10 லட்சம் முதல் 15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு (விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம் நிரந்தர பகுதி ஊனம்), ஆண்டுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்யும் வசதி, தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ளும் வசதி, விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள் நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை) வழங்கப்படும்.மேலும், விபத்தினால் மரணம், நிரந்தர ஊனம், நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின், இரண்டு குழந்தைகளின் கல்வி செலவு மற்றும் திருமணத்திற்கு, தலா ஒரு லட்சம் ரூபாய், விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகையாக, ஒரு நாளுக்கு அதிகபட்சம், 1000 ரூபாய் வீதம் 13 நாட்களுக்கு வழங்கப்படும்.விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால் ஈம கிரியைகள் செய்ய, 5,000 ரூபாய் வழங்கப்படும். 'இந்த விபத்து காப்பீட்டு பாலிசியை எடுத்து மக்கள் பயன்பெற வேண்டும்.என, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சார்பாக, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
03-Oct-2025