தொழில் திறனில் புதுமை அவசியம்; பயிற்சியாளர்களுக்கு அறிவுரை எம்பிராய்டரி பயிற்சியாளர்களுக்கு அறிவுரை
குன்னுார் : ''புதுமையுடன் தொழில் திறன்களை மேம்படுத்தி சிறப்பாக தொழில் செய்தால் வருமானம் அதிகரிப்பு மட்டுமின்றி எளிதாக சந்தைப்படுத்தி முன்னேற்றம் அடையலாம்,'' என தெரிவிக்கப்பட்டது.குன்னூர் சந்திரா காலனியில் உள்ள ஆர்.கே., டிரஸ்ட் பயிற்சி மையத்தில், இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி சார்பில், இலவச, 'ஆரிஎம்பிராய்டரி' பயிற்சி 45 நாட்கள் நடந்தது. பயிற்சி நிறைவையொட்டி சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.அதில், கோவை மண்டல இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி நிறுவன (சிட்பி) துணை பொது மேலாளர் சிபி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சான்றிதழ்கள் வழங்கி பேசுகையில், ''கைத்தொழிலை கற்றுக் கொள்வது வாழ்வாதாரத்திற்கு எப்பொழுதும் கை கொடுக்கும். இது போன்ற பயிற்சிகளை நேரடியாக பெறுவது அவசியம். தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் கற்பதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. புதுமையுடன் தொழில் திறன்களை மேம்படுத்தி சிறப்பாக தொழில் செய்தால் வருமானம் அதிகரிப்பு மட்டுமின்றி எளிதாக சந்தைப்படுத்தி முன்னேற்றம் அடையலாம்,'' என்றார்.பயிற்சியின் பயன்கள் குறித்து பயனாளர்களிடையே கேட்டறிந்தார். ஆர்.கே.டிரஸ்ட் நிர்வாகி லீலா கிருஷ்ணன் வரவேற்றார். பயிற்சியாளர் உஷா நன்றி கூறினார்.